International, News

ஈரானின் பாலத்தை தாக்கிய அமெரிக்கா;பதிலடியாக ஈரான் வெளியிட்ட வலைகுடா நாடுகளின் பாலங்களின் பட்டியல்

மத்திய கிழக்கிலேயே மிக உயரமான பாலம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜ் நகரில் அமைந்துள்ளது.அப்பாலத்தை அமெரிக்கா இஸ்ரேல் தாக்கியதற்கு பதலடியாக அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகளில் உள்ள 8 முக்கிய பாலங்களை தாக்கப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியிட்ட பட்டியலில்

குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா கடல் பாலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே, டாமியா பாலம் மற்றும் அப்தூன் பாலம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தப் பாலங்கள் மீதான தாக்குதல், வளைகுடா நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து அமைப்பை முடக்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *